ராசிபலன்

மேஷம்

இன்றைய பலன்:

பல நாட்களாக இழுத்தடித்து விவகாரம் ஒன்று இன்று நல்ல தீர்வைக் காணும் வாய்ப்புண்டு. அந்த வகையில் நிம்மதியுடன் வலம் வருவீர்கள். இன்று சிறு தடைகளைப் பொருட்படுத்தாது முயற்சிகளைத் தொடர்ந்தீர்கள் எனில் ஆதாயம் காணலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.
நிறம்: சிவப்பு, மஞ்சள்.

 

வார பலன் : 1-3-2020 முதல் 7-3-2020 வரை

இவ்வாரம் உங்கள் ஜென்ம ஸ்தானத்திற்கு வருகை புரியும் சுக்கிரனின் இடமாற்றம் சிறப்பாக அமையும். இங்குள்ள சந்திரனும் நலம்புரிவார். 3ஆம் இட ராகு, 9ஆம் இட குரு, கேது, செவ்வாய், 10ஆம் இட வக்ர புதன், 11ஆம் இட சூரியன், 12ஆம் இட சுக்கிரன் மேன்மையான பலன்களைத் தருவார்கள். 10ஆம் இட சனியால் நலமில்லை.

சூழ்நிலைக்கேற் வளைந்து கொடுத்து செயல்படக் கூடியவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் உங்களது மனக்குழப்பங்கள் சில முடிவுக்கு வரும். எதை, எப்போது, எப்படிச் செய்வது என்று குழம்பித் தடுமாறிய நிலை மாறி, இன்ன பணிகளை இப்படித் தான் செய்ய வேண்டும் எனும் தீர்மானத்துடன் களமிறங்கிச் சாதிப்பீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.  உங்களது செயல் வேகமும் ஆற்றலும் நினைத்ததைச் சாதிக்க கைகொடுக்கும்.

சிறு காரியத் தடைகளால் பாதிப்பு இருக்காது. உங்களது கச்சிதமான செயல்திட்டங்களின் துணையோடு கடினம் எனக் கருதிய பணிகளையும் சுலபத்தில் செய்து முடித்திட இயலும்.

அடுத்து வரும் நாட்களில் வரவுகள் அமோகமாக இருக்கும். நட்பு வட்டாரம் சற்றே விரிவடையும் வாய்ப்புண்டு. முன்பு தடைபட்ட சுபப் பேச்சுகள் இப்போது நல்ல முறையில் முன்னேற்றம் காணும். பணியாளர்களுக்கு சவாலான பொறுப்புகள் காத்திருக்கும். வியாபாரிகள் ஏற்றம் காண்பர். வார இறுதியில் முக்கிய சந்திப்புகள் நிகழக்கூடும். 
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும்.

அனுகூலமான நாட்கள்: மார்ச் 1, 3.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.