ராசிபலன்

கடகம்
இன்றைய பலன்:
கடகம் புதியவர்களுட
னான நட்பு புதிய உற்சாகத்தைத் தரும். எனினும் அவர்களிடம் தொடக்கத்திலேயே வீண் நெருக்கம் பாராட்டமல் இருப்பது நல்லது. பணிச்சுமை குறைவாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 7.
நிறம்: பொன்னிறம், நீலம்.
வார பலன் : 10-01-2021 முதல் 16-01-2021 வரை
அன்புள்ள கடக ராசிக்காரர்களே,
உங்கள் ஜென்ம ராசிக்கு 7ஆம் இடத்தில் வீற்றிருக்கும் குருபகவான் யோகப் பலன்களைத் தருவார். 5ஆம் இட சந்திரன், 6ஆம் இட சுக்கிரன், சூரியன், 10ஆம் இட செவ்வாய், 11ஆம் இட ராகு ஆகிய அமைப்புகள் சிறப்பாக உள்ளன. 5ஆம் இட கேது, 7ஆம் இட புதன், சனியின் ஆதரவு இல்லை.
இடம், பொருள், ஏவல் அறிந்து நடக்கும் புத்திசாலிகள் என உங்களைக் குறிப்பிடலாம். கிரக அமைப்பு ஓரளவு சாதகமாகவே உள்ளது. குருவருளால் நிறைவான நன்மைகளைப் பெறலாம். சனிபலம் இல்லை என்றாலும் தற்போதைய அவரது அமைப்பு அதிக தொல்லைகளைத் தராது என நம்பலாம். அடுத்து வரும் நாள்களில் உங்களுக்குரிய வருமானம் சிறப்பாக இருக்கும். பல நாளாக இழுபறியில் இருந்த தொகைகள் இப்போது கிடைக்கலாம். செலவுகளை எளிதில் சமாளிக்கலாம். பிறருக்கும் உதவும் வகையில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். காரியத் தடைகள் அதிகம் இல்லாத சூழ்நிலையில் ஈடுபடும் காரியங்களில் பெரும்பாலானவை திட்டமிட்டபடியே குறித்த நேரத்தில் முடிந்து ஆதாயம் காண்பீர்கள். பிறரிடம் உதவி எனக் கேட்டு நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. இனிக்கப் பேசும் நண்பர்கள் அனைவரையும் கண்மூடித்தனமாக நம்பிவிட வேண்டாம். பண விவகாரங்களில் எப்போதும் எச்சரிக்கை தேவை. சொத்துகள் தொடர்பான சிக்கல் நல்ல முடிவுக்கு வரும். பணியாளர்களின் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் இருந்த சுணக்கம் மறைந்து முன்னேற்றம் காணும். வார இறுதியில் ஒருசிலருக்கு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோர் தரும் ஆதரவு பலம்சேர்க்கும்.
அனுகூலமான நாள்கள்: ஜனவரி 11, 13.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.