ராசிபலன்

மகரம்

இன்றைய பலன்:

வீண் பேச்சைக் குறைத்துக் காரியத்திலேயே குறியாக இருக்கப் பாருங்கள். சிறு தடைகள் முளைக்கக்கூடும். எனினும் விடா முயற்சியுடன் செயல்பட்டீர்கள் எனில் அவை அனைத்தையும் கடந்திடலாம். இன்று வரவுகள் இனிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள: 3, 7.
நிறம்: பொன்னிறம், ஊதா.

வார பலன் : 19-1-2019 முதல் 25-1-2020 வரை

அன்புள்ள மகர ராசிக்காரர்களே,

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் சிறப்பாக வீற்றிருக்கிறார். 2ஆம் இட சுக்கிரன், 10ஆம் இட சந்திரன், 11ஆம் இட செவ்வாய் ஆகியோர் சுபப் பலன்களைத் தருவர். ராசியிலுள்ள புதனால் நலமுண்டு. இங்குள்ள சூரியனின் ஆதரவு இல்லை. குரு, சனி, கேதுவின் 12ஆம் இடம் அனுகூலமாக இல்லை.

தான தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் சிலபல குழப்பங்களுக்கு ஆட்படுவீர்கள். சுற்றி இருப்பவர்களில் யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு என்பதை தீர்மானிக்க இயலாமல் தடுமாற நேரிடலாம். அடுத்து வரும் நாட்களில் உங்களுக்குரிய வரவுகள் சுமார் எனும்படி இருக்கும். வழக்கமான தொகைகள் குறித்த நேரத்தில் கிடைக்காமல் போகலாம். பணிச்சுமை அதிகரிக்கும் நேரமிது. எந்த வேலையைச் செய்வது, எதைத் தவிர்ப்பது என்கிற குழப்பம் ஏற்படலாம். எனினும் நாட்களின் போக்கில் குழப்பம் நீங்கி, தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் நடைபோட்டு காரிய வெற்றி காண்பீர்கள் என்பது உறுதி. புது முயற்சிகளை சில நாட்களுக்கு ஒத்திப்போடுங்கள். நட்புப் போர்வையில் பழகும் அனைவரையும் நம்பிவிடக் கூடாது. உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. சொத்துகள், சுபப் பேச்சுகள் தொடர்பிலான முயற்சிகளில் வீண் அவசரம் கூடாது. பணியாளர்கள் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பது நல்லது. வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். வார இறுதியில் நல்லவர்களின் நட்பு கிடைத்திடும். அவர்களால் ஆதாயம் பெறலாம்.

குடும்பத்தில் அமைதி நிலவும், பெற்றோர். உடன் பிறந்தோர் தரும் ஆதரவு பலம் சேர்க்கும்.

அனுகூலமான நாட்கள்: ஜனவரி 23, 25.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.