ராசிபலன்

துலாம்

இன்றைய பலன்:

சுபச்செலவுகளைக் கண்டு மலைத்துப்போக வேண்டாம். இன்று அவற்றை ஈடுகட்டும் வகையில் வரவுகளைப் பெறுவீர்கள். பிறரது பணிகளில் ஒருசிலர் உதவ வேண்டிய சூழ்நிலை இருக்கலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.
நிறம்: ஊதா, பொன்னிறம்.

வார பலன்:  1-3-2020 முதல் 7-3-2020 வரை

அன்புள்ள துலா ராசிக்காரர்களே,

வருடக் கோள்களான கேது 3ஆம் இடத்திலும், ராகு 9ஆம் இடத்திலும் சிறப்பாக வீற்றிருக்கின்றன. 3ஆம் இட செவ்வாய், 4ஆம் இட புதன் நற்பலன்களைத் தருவார்கள். 3ஆம் இட குரு, 4ஆம் இட சனி, 5ஆம் இட சூரியனால் நலமில்லை. 7ஆம் இடம் வரும் சுக்கிரனின் இடமாற்றம் சாதகமாக இல்லை. இங்குள்ள சந்திரன் வகையிலும் அனுகூலம் இருக்காது.

எத்தகைய சூழ்நிலையிலும் மன உறுதி குலைந்து விடாது தைரியமாகவும், அதேசமயம் அதிக எதிர்பார்ப்புகள் இன்றியும் செயல்படக்கூடியவர்கள் நீங்கள். இவ்வாரம் மனக்குழப்பங்கள் சிலவற்றுக்கு ஆட்பட நேரிடலாம். சுற்றி இருப்பவர்களில் யாரை நம்புவது, யாரை ஒதுக்குவது என சுலபத்தில் தீர்மானிக்க இயலாமல் போகலாம். ஆதாயமுள்ள பணிகளை இனம் காண்பதிலும் தடுமாற்றம் ஏற்படலாம். எனினும் இது தற்காலிக பின்னடைவுதான். வார மத்தியில் இத்தகைய குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெளிவாக நடைபோடுவீர்கள்.

புதுப் பொறுப்புகளை ஏற்பதைக் காட்டிலும் முன்பே ஒப்புக்கொண்ட, திட்டமிட்ட பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதுதான் புத்திசாலித்தனம். நண்பர்கள் நல்லுறவு பாராட்டுவர் என்பதோடு தேவையான உதவிகளைச் செய்து தோள் கொடுப்பர். உங்களில் ஒருசிலருக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. வரவுகள் என்பன சுமார் தான். இச்சமயம் சிக்கனம் காப்பது முக்கியம்.

பணியாளர்களும் வியாபாரிகளும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டிய நேரமிது. வார இறுதியில் சூழ்நிலை சாதகமாகும். இச்சமயம் தடைபட்ட பணிகள் முன்னேறும். எதிர் பாராத தொகைகள் தேடிவரும்.

குடும்பத்தில் எந்தக் குறையும் இல்லை. உடன் பிறந்தோர் உதவிகரமாக இருப்பர்.

அனுகூலமான நாட்கள்: மார்ச் 5, 7.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3.