ராசிபலன்

விருச்சிகம்

இன்றைய பலன்:

மனதில் தோன்றும் சந்தேகங் களை ஆஉடனுக்குடன் தீர்த்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது. இன்று சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவது மட்டும் கூடாது. தடைகளை மீறி சில முக்கிய பணிகள் நடந்தேறிடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9.
நிறம்: அரக்கு, பச்சை.

வார பலன் : 19-1-2019 முதல் 25-1-2020 வரை

குருபகவான் உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் அமைப்பு மகத்தானது. 3ஆம் இட புதன், சூரியன், 4ஆம் இட சுக்கிரன் மேன்மையான பலன்களைத் தருவார்கள். ஜென்ம ஸ்தான செவ்வாய், 2ஆம் இட சனி, கேது, 8ஆம் இட ராகு, 12ஆம் இட சந்திரனின் அனுகூலத்தன்மை கெடும். 

என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் தன்னம்பிக்கைவாதிகள் நீங்கள். இவ்வாரம் உங்களது செயல்வேகமும் ஆற்றலும் அதிகரிக்கும். முன்னைவிட கச்சிதமாகவும் சிறப்பாகவும் செயல்படுவீர்கள். இதற்கேற்ப சூழ்நிலையும் ஓரளவு சாதகமாக இருக்கும் என நம்பலாம். எனினும் அதிகம் உழைத்தால்தான் திட்டமிட்டதைச் சாதித்து ஆதாயங்களைப் பெற முடியும் என்பதை மனதிற் கொள்ளுங்கள். பொதுவாக தற்போது பொறுப்புகள் அதிகரிக்கும். எந்நேரமும் ஏதேனும் ஒரு பணியில் மூழ்க வேண்டியிருக்கும். சற்றும் எதிர்பாராத வகையில் உங்களைத் தேடி புது வாய்ப்புகள் வரலாம். அவற்றை ஏற்பது குறித்து அனுபவசாலிகளிடம் கேட்டுப் பெறுங்கள். உடல்நலம் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. வழக்கமான உற்சாகத்துடன் வேகமாகச் செயல்படுவீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வரவுகள் சிறப்பாகவே இருக்கும். செய்யும் பணிக்குரிய ஆதாயங்கள் உடனுக்குடன் கிடைத்திடும். சேமிக்கலாம் என நினைக்கும் போது எதிர்பாராத செலவு முளைத்திடும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் நல்லிணக்கத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் எந்தச் சிக்கலும் எழாது. வார இறுதியில் சந்திக்கும் புதிய ஒருவரால் ஆதாயம் உண்டாகும். எனினும் அவர்களுடன் வீண் நெருக்கம் பாராட்டாமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் எந்தக் குறையும் இல்லை. பிள்ளைக ளின் கல்வி குறித்து செலவுகள் அதிகரிக்கலாம்.

அனுகூலமான நாட்கள்: ஜனவரி 20, 22.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.