ராசிபலன்

ரிஷபம்

இன்றைய பலன்:

ரிஷபம் இன்று எங்கும் எதிலும் கவனம் என்பது தேவை. குறிப்பாக, சர்ச்சைக்குரிய விஷயங்களில் இருந்து ஒதுங்கி நிற்கப் பாருங்கள். எதிர்பார்த்த வரவுகள் கிட்டும் எனில் செலவுகளும் உண்டு. பணிச்சுமை குறைவுதான்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7

நிறம்: பொன்னிறம், ஊதா

வார பலன் : 15-08-2021 முதல் 21-08-2021 வரை

அன்புள்ள ரிஷப ராசிக்காரர்களே,

மாதக் கோள்களான புதன் ராசிக்கு 4ஆம் இடத்திலும், சுக்கிரன் 5ஆம் இடத்திலும் சஞ்சரிக்கின்றன. இந்த அமைப்புகள் சாதகமான பலன்களைத் தரும். ஜென்ம ராகு, 7ஆம் இட கேது, சந்திரன், 9ஆம் இட சனி, 10ஆம் இட குருவின் ஆதரவில்லை. 4ஆம் இடம் வரும் சூரியன், அங்குள்ள செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கும் அமைப்பு சாதகமற்றது.

சூழ்நிலை, சுற்றத்தாரை அனுசரித்து நடக்கக் கூடியவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். கிரக அமைப்பைப் பார்த்தபின் இது கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் என்பதை உணர்ந்திருப்பீர்கள். இவ்வாரம் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கூடுதல் நிதானம் தேவை. சுற்றி உள்ளவர்கள் ஆயிரம் சொல்லட்டும். ஆனால் எதிலும் தீர ஆலோசித்து, இறுதி முடிவுகளை எடுப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். அடுத்து வரும் நாள்களில் உங்களுக்குரிய வரவுகள் சுமார் எனும்படி இருக்கும். இச்சமயம் செலவுகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பற்றாக்குறை நிலை ஏற்படலாம். உடல்நலம் ஒரே சீராக இருக்காது. எனவே ஆதாயங்களுக்காக அலைந்து திரிய வேண்டாம். வீடு, வாகனம் வகையில் வீண் விரயங்கள் ஏற்படலாம். நெருக்கமானவர்கள் என்றாலும் கூட பண விவகாரங்களில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். பணியாளர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய வியாபாரிகள் கவனமாகச் செயல்பட வேண்டிய நேரமிது. வார இறுதியில் சந்திக்கும் புதியவர்களுடன் வீண் நெருக்கம் பாராட்டாமல் இருப்பது நல்லது.

குடும்ப விவகாரங்களை வெளியாட்களுடன் விவாதிக்காமல் இருப்பது நல்லது.

அனுகூலமான நாள்கள்: ஆகஸ்ட் 19, 21.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.