ராசிபலன்

கன்னி
இன்றைய பலன்:
கன்னி தேவையின்றி யாருடனும் மோதல் போக்கைக் கடைப் பிடிக்க வேண்டாம். அதே சமயம் பிறருடன் வீண் நெருக்கம் பாராட்டுவதும் கூடாது. சிறு தடைகளுக்கு மத்தியில் முக்கிய காரியத்தை முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.
நிறம்: ஊதா, அரக்கு.
வார பலன் : 22-05-2022 முதல் 28-05-2022 வரை
அன்புள்ள கன்னி ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான புதன், சுக்கிரன் ராசிக்கு 8ஆம் இடத்திலும், சூரியன் 9ஆம் இடத்திலும் சிறப்பாக சஞ்சரிக்கின்றன. 6ஆம் இட சந்திரனால் நலமுண்டு. 7ஆம் இட குருவின் பரிபூரண அருளைப் பெறலாம். 2ஆம் இட கேது, 5ஆம் இட சனி, 7ஆம் இட செவ்வாய், 8ஆம் இட ராகு தொல்லை தருவர்.
எதிரிகளையும் அரவணைத்துச் செல்லும் பக்குவசாலிகள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் குருவின் ஆதரவோடு வெற்றிநடை போடலாம். இதற்காக மனம்போன போக்கில் செயல்படக் கூடாது. பொறுப்புகளை ஏற்பதிலும் முக்கிய வேலைகளைச் செய்து முடிப்பதிலும் கூடுதல் கவனமும் உழைப்பும் தேவை. தடைகள் திடீரென அதிகரிக்கும் வாய்ப்புண்டு. அதற்காக எந்தப் பணியையும் ஒத்திப்போடுவது கூடாது. மாறாக தகுந்த செயல்திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டால் வெற்றி வசமாகும். சிறு உதவிகளை எதிர்பார்க்கலாம். அதற்காக முழுப் பொறுப்பையும் பிறரிடம் ஒப்படைப்பது கூடாது. அடுத்து வரும் நாள்களில் உங்களுக்குரிய வரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளுக்குப் பஞ்சமில்லை. எனினும் சமாளித்திடலாம். உடல்நலம் ஒரே சீராக இருக்குமா என்பது சந்தேகம்தான். எனவே, ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு உடலை வருத்திக்கொள்ள வேண்டாம். முன்பு தடைபட்ட மங்கலப் பேச்சுகள் இப்போது முன்னேற்றம் காண்பது நிம்மதி தரும்.
பணியாளர்களும் தொழில் முனைவோரும் உழைப்புக்குரிய உயர்வைப் பெறுவர். வார இறுதியில் நல்ல தகவல்கள் தேடி வரும். இச்சமயம் வீண் விவகாரங்கள் தலைதூக்கலாம் என்பதால் அடக்கி வாசிக்கவும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். மனைவி, மக்கள் அனுசரணையாக இருப்பர்.
அனுகூலமான நாள்கள்: மே 22, 24.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.