கொரோனா கிருமித்தொற்று: ஒரே நாளில் 300 பேர் பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா கிருமித் தொற்றால் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 183 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 பேர் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் மகாராஷ்டிராவிலும் டெல்லியில் இருவரும் குஜராத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஒட்­டு­மொத்­த­மா­கப் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யில் 55 பேர் வெளி­நாட்­டி­னர். மேலும் நாட்­டில் அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் 423 பேரும், தமி­ழ­கத்­தில் 411 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

இதற்­கி­டையே டெல்­லி­யில் 386 பேருக்கு கொரோனா கிரு­மித் தொற்று ஏற்­பட்­டுள்­ளது. கேர­ளா­வில் 295, ராஜஸ்­தா­னில் 179, ஆந்­தி­ரா­வில் 161, தெலுங்­கானாவில் 158 பேருக்கு கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்­புள்­ளது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதர மாநி­லங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை நூறுக்­கும் குறை­வா­கவே உள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மிசோ­ராம், அரு­ணா­ச­லப்­பி­ர­தே­சம் ஆகிய இரு மாநி­லங்­களில் தலா ஒரு­வர் மட்­டுமே கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஜார்க்­கண்ட், மணிப்­பூ­ரில் தலா இரு­வ­ரும், இமாச்­ச­லப்­பி­ர­தே­சத்­தில் 6 பேருக்­கும் நோய்த் தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இந்­நிலை­யில் சமூக இடை­வெ­ளி­யைத் தொடர்ந்து கடைப்­பி­டித்­தால் பாதிக்­கப்­ப­டு­வோர் மற்­றும் உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்கை வெகு­வா­கக் குறை­யும் என மத்­திய சுகா­தார அமைச்சு மேலும் தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 நோயால் நாட்டி­லேயே அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 26 பேரும், குஜ­ராத்­தில் 9 பேரும், தெலுங்­கா­னா­வில் 7 பேரும் பலி­யாகி உள்­ள­னர். மத்­தியப் பிர­தே­சத்­தி­லும் டெல்­லி­யி­லும் தலா 6 பேரும், பஞ்­சா­பில் 5 பேரும் உயி­ரி­ழந்­துள்ள நிலை­யில் மேற்கு வங்­கம், கர்­நா­ட­கா­வில் தலா மூன்று பேரை கொவிட்-19 காவு வாங்­கி­யுள்­ளது.

கேர­ளா­வில் பலி எண்­ணிக்கை 2ஆக உள்ள நிலை­யில் ஆந்­திரா, பீகார், இமாச்­ச­லப்­பி­ர­தே­சம் ஆகிய மாநி­லங்­களில் தலா ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!