ஜார்க்கண்ட்டில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி

ஜார்க்கண்ட்டில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி

1 mins read
b7b6dac3-5a9b-47ce-b47d-ffc1c0b3d635
ஜார்க்கண்ட்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் அதிவேகமாகச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் சிக்கியிருக்கும் பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்து விட்டனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள கோரஹர் காவல்நிலையத்தின் அருகே இந்த விபத்து நடந்தது.

அந்தப் பேருந்தில் 50 பயணிகள் பயணம் செய்தனர்.

மீட்கப்பட்டவர்களைத் தவிர்த்து மேலும் சிலர் பேருந்துக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜார்க்கண்ட்விபத்துபயணிகள்