மருத்துவ ஊர்தி வழங்கப்படாததால் மகனின் உடலை மோட்டார்சைக்கிளில் கொண்டு சென்றார்

இறந்த மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குக் கொண்டுசெல்ல மருத்துவ அவசர ஊர்திகள் மறுத்துவிட்டதாகக் கூறிய அச்சிறுவனின் தந்தை, மோட்டார்சைக்கிளில் உடலைத் தூக்கிச்செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்தியாவின் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தின் சங்கம் கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

மருத்துவ ஊர்திகள் இச்சேவையை வழங்க மறுத்துவிட்டதாக அச்சிறுவனின் தந்தை கூறியதை ஏற்க காவல்துறையினர் மறுத்தனர். மருத்துவ ஊர்தியை அழைக்க ஏற்பாடு செய்யும் வரை அச்சிறுவனின் தந்தை காத்திருக்கவில்லை என அதிகாரிகள் கூறினர்.

ஸ்ரீராம், 8, ஈஸ்வர், 10, எனும் இரு சிறுவர்கள், சங்கம் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க கால்வாய்க்கு விளையாடச் சென்றனர். விளையாடிக்கொண்டு இருந்தபோது அவர்கள் தவறுதலாக நீர்த்தேக்கத்திற்குள் விழுந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்ட அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், அச்சிறுவர்களைக் காப்பாற்ற விரைந்தனர். எனினும், அச்சிறுவர்களை அவர்களால் உயிருடன் மீட்கமுடியவில்லை.

முதலில் மீட்கப்பட்ட ஸ்ரீராமின் சடலம், அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஸ்ரீராம் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

உடலை வீட்டிற்கு எடுத்துச்செல்ல ஸ்ரீராமின் உறவினர்கள் மருத்துவ ஊர்தி ஊழியர்களின் உதவியை நாடினர். எனினும், சில விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி ஊர்தியை அனுப்ப ஊழியர்கள் மறுத்துவிட்டதாக ஸ்ரீராம் குடும்பத்தின் தரப்பில் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஸ்ரீராம் உறவினர்கள் ஆட்டோ ஓட்டுநர்களை அணுகினர். அந்த ஓட்டுநர்களும் குடும்பத்தாரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

வேறு வழியின்றி, ஸ்ரீராமின் உடலை அவருடைய தந்தை தமது மோட்டார்சைக்கிளில் வீட்டிற்குக் கொண்டு சென்றார்.

இதற்கிடையே, மற்றொரு சிறுவனான ஈஸ்வரும் நீர்த்தேக்கத்தில் மூழ்கியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தளம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!