அமேசான், ஃபிலிப்கார்ட் நிர்வாகிகளுக்கு இந்தியா அழைப்பாணை

1 mins read
65430fbe-b2db-4ef3-b3ea-a690bdf96c88
அமேசான், ஃபிலிப்கார்ட் நிறுவனங்களின் விற்பனையாளர்களுக்குச் சொந்தமான சில இடங்களில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: வெளிநாட்டு முதலீடு விதிமீறல் நடந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அதுதொடர்பாக இந்தியாவின் நீதிக் குற்ற புலனாய்வுத்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், அமேசான், ஃபிலிப்கார்ட் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மின்வர்த்தக நிறுவனங்களின் விற்பனையாளர்களுக்குச் சொந்தமான சில இடங்களில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பிட்ட சில விற்பனையாளர்களுக்கு மட்டும் சாதகமாக இவ்விரண்டு நிறுவனங்களும் நடந்துகொண்டதாக அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சுட்டியது.

இந்தியச் சட்டத்துக்கு உட்பட்டு நடந்திருப்பதாக அமேசானும் ஃபிலிப்கார்ட்டும் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்