ஈரான் போரால் பாதிக்கப்பட்ட இந்திய அரிசி ஏற்றுமதி

ஈரான் போரால் பாதிக்கப்பட்ட இந்திய அரிசி ஏற்றுமதி

1 mins read
57cd6508-f718-419b-905e-c52ab0c3e416
கடந்த நிதியாண்டில் இந்தியா 6 மில்லியன் டன் எடையுள்ள நீளமான பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்தது.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: மத்திய கிழக்குப் போரால் இந்தியாவின் செழிப்பான அரிசி ஏற்றுமதி வர்த்தகம் பலத்த அடிவாங்கியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள சரக்குக் கப்பல்கள் நிலைகுத்தியதுடன் உணவு விலை, உணவுப் பாதுகாப்பு ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல அறுவடை இருந்ததால் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஈரானில் தொடரும் போரால் அந்த நிலை மாறியுள்ளது.

முக்கியச் சந்தைகளுக்குச் செல்ல முடியாத அளவுக்குத் துறைமுகங்களிலும் கடலிலும் 400,000 டன் அரிசி தேங்கி நின்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

உலகின் ஆகப் பெரிய அரிசி உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமாக இந்தியா உள்ளது. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு இந்தியாவிலிருந்து செல்கிறது.

கடந்த நிதியாண்டில் இந்தியா 6 மில்லியன் டன் எடையுள்ள நீளமான பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்தது. அவை பெரும்பாலும் மத்திய கிழக்கிற்குச் சென்றன.

குறிப்புச் சொற்கள்
அரிசிஏற்றுமதிஇந்தியா