கோழிக்கோடு: புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர்களான கே.ஜே.இயேசுதாஸ் மற்றும் கே.எஸ்.சித்ராவின்மீது கல் வீசியவரை 24 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறை கைதுசெய்தது.
மலபார் திருவிழாக் கொண்டாட்டங்களை ஒட்டி, கோழிக்கோடு கடற்கரையில் 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இரவு நடந்த இசை நிகழ்ச்சியில் அவ்விரு பாடகர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது அங்கு அவர்கள்மீது கற்களை வீசிய கும்பலில் பேப்பூர் பகுதியைச் சேர்ந்த என்.வி.அஸீஸ், 56, என்பவரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த அஸீஸின் அண்டை வீட்டுக்காரர் காவல்துறையிடம் தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, மலப்புரத்தில் தமது வீட்டில் இருந்த அஸீஸைக் காவல்துறை கைதுசெய்தது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அஸீஸ், பின்னர் பிணையில் விடுதலையானார்.

