உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார் நிதிஷ் குமார்

1 mins read
a56086df-23e8-4cfd-b787-e28673868486
பீகார் முதலமைச்சர் நிதி‌‌ஷ்குமார். - படம்: மாலை மலர்

பீகார்: பீகார் மாநில முதலமைச்சராகப் பத்தாவது முறையாகப் பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், லண்டன் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார், 10வது முறையாகப் பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அவர் 2005ஆம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அந்தப் பதவியில் நீடித்து வருகிறார்.

சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதலமைச்சராக 10வது முறையாகப் பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையைப் பெற்றதை அங்கீகரித்து, நிதிஷ் குமாரின் பெயர் உலகச் சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியச் செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அல்லாமல், சட்ட மேலவை உறுப்பினராகவும் (எம்எல்சி) நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்