காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் பணம்; விசாரிக்க மாநிலங்களவை நாயகர் உத்தரவு

1 mins read
78848e55-2a8a-4fd6-ad66-4dda88bb9099
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் மனு சிங்வி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) காலை மாநிலங்களவை கூடியதும், முக்கிய அறிவிப்பு ஒன்றை உறுப்பினர்கள் மாநிலங்களவை நாயகர் ஜகதீப் தன்கர் வெளியிட்டார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

டிசம்பர் 5ஆம் தேதி நாடாளுமன்ற அவைகள் கலைந்தவுடன் வழக்கமான சோதனைகள் செய்யப்பட்டன. அப்போது, அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222ல் அதிகளவிலான பணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்