ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய நால்வர் கைது

புதுடெல்லி: ஹாங்காங்கில் இருந்து டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 11 கிலோ தங்கம் இரு பெட்டிகளில் கடத்தி வரப்பட்டதை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து தங்கம் கடத்திய நால்வரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.