அதிமுகவுக்குப் பாராட்டு; கூட்டணிக்கு பாஜக முயற்சி

தமி­ழ­கத்­தின் ஆளும் கட்­சி­யான அதிமுக சட்­ட­மன்றத் தேர்தல் பிர­சா­ரத்தை நேற்றுத் தொடங்­கிய­வேளையில் தமிழக வெள்ள சேதங்களைப் பார்வை­யிட வந்த மத்திய அமைச்­ச­ரவைக் குழு தமிழக அரசைப் பாராட்­டி­யுள்­ளது. உள்துறை இணைச் செய­லா­ளர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமை­யி­லான குழு­ முதலமைச்­சர் ஜெய­ல­லி­தாவைச் சந்­தித்­துப் பேசியது. தமி­ழ­கத்­தில் வெள்ள பாதிப்பு ஏற்­பட்டபோது மாநில அரசின் அனைத்­துத் துறை­களும் மீட்பு, நிவாரணப் பணி­களை துரி­தமாக மேற்­கொண்ட­து­டன், சுகா­தா­ரப் பணிகள், நோய் தடுப்பு மருத்­துவ முகாம்­கள், சீரமைப்­புப் பணிகளை உரிய நேரத்­தில் செய்­த­தற்­காக மத்திய அரசின் அனைத்து அமைச்­ச­கங்களும் தமிழக அர­சுக்­குப் பாராட்­டுத் தெரி­வித்­த­தாக டி.வி.எஸ்.என்.பிரசாத் கூறினார்.

வெள்ளப் பிரச்­சினையை அதிமுக அரசு முறை­யா­கக் கையா­ள­வில்லை என திமு­க­வும் மற்றக் கட்­சி­களும் சாடி வரும் வேளையில் மத்திய அரசின் இந்த பாராட்­டில் அர­சி­யல் நோக்கம் இருக்­க­லாம் என கூறப்­படு­கிறது. சட்­ட­மன்றத் தேர்­த­லில் கூட்டணி குறித்து இதுவரை அதிமுக எதையும் கூற­வில்லை. அதிமுக பொதுக்­கு­ழு­வில் பேசிய முதல்­வர் ஜெய­ல­லிதா, ‘சூழ்­நிலைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்­யப்­படும்’ என்றார். இந்­நிலை­யில் அக்­கட்­சி­யு­டன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்து வரு­கிறது, மக்கள் நலக்­கூட்­ட­ணி­யும் விரும்­பு­கிறது.

மக்கள் நலக் கூட்­ட­ணி­யில் மார்க்­சிஸ்ட், இந்திய கம்­யூ­னிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவை உள்ளன. தேமுதிக, தமாகா, கட்­சி­களை இந்தக் கூட்­ட­ணிக்கு இழுக்­கும் பணியை இக்­கூட்­ட­ணி­யி­னர் மேற்­கொண்டு உள்­ள­னர். தேமுதிக வரா­விட்­டால் கூட்டணி பலம் வாய்ந்த­தாக இருக்­காது என சிலர் நினைப்பதால் அதி­மு­க­வு­டன் கூட்­ட­ணிக்கு முயற்சி நடப்­ப­தாகத் தெரிகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்

இமாச்சலப் பிரதேசத்தில் பியாஸ் நதி பெருக்கெடுத்து ஓடுவதால் குலு என்ற மாவட்டத்தில் பல இடங்களிலும் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் பாதிப்பு