பிஸ்வாஸ்: அனைத்திலும் தோல்வி கண்ட பாஜக அரசு

மதுரை: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது என பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், மத்திய அமைச்சர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்றார். “பதான்கோட் ராணுவத் தாக்குதல் தொடர்பில் மத்திய அமைச்சர்கள் ஆளாளுக்கு ஒருவிதமான கருத்து தெரிவிக்கின்றனர்.

நாட்டு மக்களின் பாதுகாப்புடன் மத்திய அரசு விளையாடுகிறது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும்,” என்றார் பிஸ்வாஸ். காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றம்சாட்டிப் பேசி னால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அக்கட்சி யினர் தடுப்பதாகக் குறிப் பிட்ட அவர், காங்கிரசும் பாஜகவும் அல்லாத இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மக்கள் பிரச்சினைகளுக்காக பார்வர்ட் பிளாக் தொடர்ந்து போராடும் என்றார்.

“நேதாஜி பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதியை, தேச பக்தி தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம். இருப்பினும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாநில குழுக் கூடி, கூடுதல் தொகுதிகள் பெறு வது குறித்து முடிவு செய் யும்,” என்றார் பிஸ்வாஸ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி