பேருந்து விபத்து: பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் உடல் நசுங்கி மரணம்

நாகர்கோவில்: காரைக்காலிலிருந்து நேற்று முன்தினம் 9 மணிக்கு குளிர்சாதன வசதியுடைய தனியார் ஆம்னி பேருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். பேருந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த நெல்லை= நாகர்கோவில் நான்கு வழிச்சாலை யில் உள்ள பிலாக்கொட்டை பாறை என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியது.

இதனால் ஆம்னி பேருந்து கவிழ்ந்து சாலையின் இடதுபுறத் தில் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பேருந்து உருண்டு ஓடுவதைக் கண்டு அவர்கள் அலறினர். பேருந்தில் இருந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயி ரிழந்தனர்.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாகச் சென்ற வர்கள் ஆம்புலன்சை வரவழைத்த னர். காயமடைந்த 30 பேர் நாகர் கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டனர். அப்போது அவர்களுள் ஒரு வர் மாண்டார். இதனால் பலியா னோர் எண்ணிக்கை 10 ஆனது. சிகிச்சை பெற்று வருபவர் களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்