ஜல்லிக்கட்டுக்கு முன்பதிவு தொடங்கியது

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி களைக் கண்டு ரசிப்பதற்காக வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக் கட் டைக்காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு சுற்றுலாத்துறை அவர் களை அழைத்துச் செல்கிறது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் பிரான்ஸ், ஜெர் மனி, கனடா உட்பட 60 நாடுகளுக் கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தொலைபேசி, இணையம் வழியாக சுற்றுலாத் துறை அலுவலகத்தில் தங்களுடைய பெயரை முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையே, ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான வழிகாட்டல் நெறிமுறைகள் அரசிடமிருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.