திமுகவில் இணைய நாஞ்சில் சம்பத் முடிவு

சென்னை: அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத் மீண்டும் திமுக வில் இணைய முடிவு செய்தி ருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக, திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. மதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்த நாஞ்சில் சம்பதுக்கு அக்கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அக்கட்சியில் இருந்து விலகினார்.

இதையடுத்து அதிமுகவில் இணைந்த அவருக்கு துணை கொள்கை பரப்புச் செயலர் பதவி வழங்கப்பட்டது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் உரையாற்றி வந்தார் நாஞ்சில் சம்பத். இந்நிலையில், அண்மையில் தனியார் தொலைகாட்சிக்குப் பேட்டியளித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாகப் பதிலளித்தார். எனினும் அவரது இச்செயல்பாடு அதிமுக தலை மைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி யதாகக் கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. எனினும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக அவர் இன்னும் நீடிக்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதுடெல்லியில் உள்ள
லோக் நாயக் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு வெளியே தீ விபத்தில் சிக்கிய ஒருவரின் உறவினர் கதறி அழுகிறார். படம்: இபிஏ

09 Dec 2019

தீ விபத்து; கட்டட உரிமையாளர் கைது

தொழிற்சாலை தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தில் கருகிய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படம்: ஏபி

09 Dec 2019

டெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து