பழனி கோவிலில் குவியும் போலி தங்கம், வெள்ளி காணிக்கைகள்

பழனி: கோவிலில் காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் தங்கம், வெள்ளி முலாம் பூசிய தகடுகளை விற்பனை செய்து நடைபாதையோர வியாபாரிகள் ஏமாற்றி வருவது அம்பலமாகி உள் ளது. இதையடுத்து அத்தகைய வியாபாரிகளை இனம்காண பழனி காவல்துறை நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடவுள் சிலைகள், கால், தலை போன்ற உருவங்கள் கொண்ட தகடுகளை காணிக் கையாகச் செலுத்துவது வழக்கம். தங்கம், வெள்ளித் தகடுகளை காணிக்கையாக செலுத்துவதே பக்தர்களின் விருப்பமாக உள்ளது. இதை நன்கு அறிந்துள்ள நடைபாதை வியாபாரிகள் சிலர், அலுமினியத் தகடுகள் மீது தங்கம், வெள்ளி முலாம் பூசுகி றார்கள். பின்னர் அவை உண்மை யான தங்க, வெள்ளித் தகடுகள் என்று கூறி விற்பனை செய் கிறார்கள்.

விலை குறைவாக இருப்பதால், போலித் தகடுகளை அசல் தங்கம், வெள்ளியில் செய்யப்பட்டதாகக் கருதி பக்தர்கள் வாங்குவதுடன் அவற்றையே கோவில் உண்டியலில் காணிக்கையாகவும் செலுத்துகின் றனர்.2016-01-12 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். படம்: ஊடகம்

07 Dec 2019

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி விண்ணப்பம்

மக்களவையில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014ஆம் ஆண்டிலிருந்து இது வரையில் 3.18  லட்சம் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். படம்: ஊடகம்

07 Dec 2019

இந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்