வாழைப்பழத்தை சூறை விட்டு வழிபடும் பக்தர்கள்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் லட்சக்கணக்கில் வாழைப்பழங்களை பக்தர்கள் சூறை விட்டு வழிபட்டனர். சேவுகம்பட்டி கிராமத்தில் உள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தை 3ஆம் தேதி வாழைப்பழங்கள் சூறை விடப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறி
னால் நேர்த்திக்கடனாக வாழைப்பழங்களை கூடை கூடையாகக் கொண்டுவந்து சுவாமி முன் வைத்து வணங்கிவிட்டு மேல்நோக்கித்
தூக்கி எறிகின்றனர். கோயிலுக்கு வந்துள்ள மற்ற பக்தர்கள் இதைப் பிரசாதமாக நினைத்துப் பிடித்து உட்கொள்கின்றனர். படம்: ஊடகம்