நிபந்தனை விதிக்கும் காங்கிரஸ்: வெங்கையா நாயுடு கண்டனம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக் களை ஆதரிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சரக்கு, சேவை வரி மசோதாவை ஆதரிக்க காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பாக செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சரக்கு, சேவை வரியை அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது மத்திய அரசு. வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்நடைமுறை அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை யில் தாக்கல் செய்யப்பட்டு, அங்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்எ களவையில் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரை ஆதரவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக மசோதாவை நிறைவேற்றுவதில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது.