முதல்வர் கெஜ்ரிவால் மீது மை வீச்சு: இளம்பெண் கைது

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசிய இளம் பெண் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகதான் இதற்குக் காரணம் என ஆம் ஆத்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுபடு வதைத் தடுக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்றை அம்மாநில அரசு அமல்படுத்துகிறது. இது சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் முதல்வர் கெஜ்ரி வால் கொண்டுவந்த இந்தத் திட்டத்திற்கு பெரியளவில் வர வேற்பு கிடைத்திருப்பதாகக் கூறி, அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், புதிய திட்டத்தை அமல்படுத்த முயல்வதற்கான காரணத்தை விவரித்தார். அப்போது கூட்டத்தில் அமர்ந் திருந்த பாவ்னா அரோரா என்ற 26 வயது பெண் திடீரென தனது கையில் வைத்திருந்த மை, காகி தங்கள், குறுந்தகடு ஆகியவற்றை கெஜ்ரிவாலை நோக்கி வீசினார். கெஜ்ரிவால் நின்ற இடத்திற்கு சற்று முன்பாக மை புட்டி விழுந்தது. எனினும் அவர் மீதும் அருகே நின்று கொண்டிருந்த சிலர் மீதும் மைத்துளிகள் பட்டன.

இதனால் நிகழ்வரங்கில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. போலிசார் உடனடியாக பாவ்னாவை சுற்றி வளைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவரை விடுவிக்குமாறு கெஜ்ரி வால் கேட்டுக்கொண்ட போதிலும் போலிசார் அதை ஏற்க மறுத்து விட்டனர்.