சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக் களை ஆதரிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சரக்கு, சேவை வரி மசோதாவை ஆதரிக்க காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பாக செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சரக்கு, சேவை வரியை அமல் படுத்த திட்டமிட்டு இருக்கிறது மத்திய அரசு. வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்நடைமுறை அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை யில் தாக்கல் செய்யப்பட்டு, அங்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்எ களவையில் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இந்த மசோதாவுக்கு காங்கி ரஸ் தரப்பிலிருந்து இதுவரை ஆதரவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக மசோதாவை நிறைவேற்றுவதில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது.

சரக்கு, சேவை வரி மசோ தாவில் அதிகபட்ச வரி பற்றிய வரையறையை நிர்ணயிக்க காங்கிரஸ் விரும்புவதாக அதன் துணைத் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத் திய அமைச்சர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் மீது குறை கூறினார். மசோதாக்களை நிறை வேற்ற நிபந்தனைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்றார் அவர். “காங்கிரசின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் சரக்கு,

சேவை வரி மசோதாவை ஆத ரிக்கத் தயார் என்று ராகுல்காந்தி கூறி இருக்கிறார். அதேநேரம் இதில் வரையறை தொடர்பாக காங்கிரஸ் எந்தப் பரிந்துரையையும் எப்போதும் செய்ததில்லை. இப்படி யொரு நிலையில் திடீரென்று இந்த மசோதாவிற்கு அக்கட்சி நிபந்தனை விதிப்பது சரி அல்ல. “பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இது தொடர் பாக சில பிரச்சினைகளை காங்கி ரஸ் எழுப்பியது. அப்போது, முன் னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் அரசின் நிலைப்பாட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி விளக்கினார்,” என்றார் வெங்கையா நாயுடு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்