மோடி மன்னிப்பு கோர கெஜ்ரிவால் வலியுறுத்து

ஹைதராபாத்: தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பில் பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலி யுறுத்தி உள்ளார். நடந்த சம்பவத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர பிரதமர் தயங்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இதை யடுத்து அங்கு பல்வேறு தரப்பி னரும் போராட்டத்தில் குதித் துள்ளனர்.

பாரதிய ஜனதாவுக்கு ஆதர வான அமைப்பைச் சேர்ந்தவர்க ளுக்கு சாதகமாக பல்கலைக் கழகம் செயல்படுவதாகவும் அதன் எதிரொலியாகவே ரோஹித் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, ரோஹித் வெமுலா உட்பட 5 மாண வர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியது.

பின்னர் பல்கலைக்கழக விடுதியில் இருந்தும் அவர்கள் வெளியேற் றப்பட்டனர். இதனால் மன முடைந்த ரோஹித் தனது விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது