ஜல்லிக்கட்டை எதிர்ப்பது எங்களுடைய நோக்கமல்ல: ‘பீட்டா’ அமைப்பு

புதுடெல்லி: ஜல்லிக்கட்டை எதிர்ப்பது தங்களது நோக்கமல்ல என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பு தனது இணையதளத்தில் அளித்துள்ள விளக்கம் ஒன்றில், விலங்குகள் மீதான சித்திரவதையை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகக் கூறியுள்ளது. “உள்நாட்டு காளை இனத்தை அழிக்கும் நோக்கத்திலேயே நாங்கள் செயல்படுவதாகக் கூறுவது முற்றிலும் தவறு. வளர்ப்புப் பிராணிகள் அழியக்கூடிய உயிரினங்களாக மாறாது,” என்றும் பீட்டா தெரிவித்துள்ளது.