அச்சிட்டதில் தவறு: தீயிட்டுக் கொளுத்தப்பட்டது 30,000 கோடி ரூபாய்

மும்பை: பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் அச்சிடப்பட்ட 30,000 கோடி ரூபாய் (S$6.3 பி.) நோட்டு களை நாசிக்கில் உள்ள இந்தியப் பாதுகாப்பு அச்சகம் தீயிட்டுக் கொளுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய உச்ச வங்கியான ரிசர்வ் வங்கி ரூ.50,000 கோடிக்கு 1,000 ரூபாய் நோட்டுகளை அச்ச டிக்க இந்தியப் பாதுகாப்பு அச்சகத்தைக் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் கூறின. இதையடுத்து, ஹொசங்காபாத் தில் உள்ள இந்தியப் பாதுகாப்பு அச்சக, நாணய சாலைக் கழகத்தில் இருந்து தாட்களைப் பெற்ற நாசிக் அச்சகம் முதற்கட்டமாக 30,000 கோடி ரூபாயை அச்சிட்டு ரிசர்வ் வங்கியிடம் வழங்கியது.

அவற்றில் ரூ.20,000 கோடியை நாட்டிலுள்ள பல வங்கிகளுக்கு அது விநியோகித்துவிட்டது. இந்நிலையில், அந்த நோட்டுக ளும் புழக்கத்திற்கு வர, வழக்க மான ரூபாய் நோட்டுகளில் இருக் கும் பாதுகாப்பு ஊடுஇழை குறிப் பிட்ட வரிசை கொண்ட அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இல்லாதது கண்டு பலரும் புகார் செய்தனர். அத்துடன், அந்த நோட்டுகளில் மகாத்மா காந்தியின் நீர்வரிப் படம் (வாட்டர் மார்க்) தலைகீழாக இருந்ததையும் சிலர் சுட்டிக் காட்டினர். இப்படி மொத்தம் 190 புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குறிப்பிட்ட வரிசை எண்களைக் கொண்ட அந்நோட்டுகளின் விநியோகத்தை நிறுத்திவைக்கும்படி வங்கிக ளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத் தியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்