கடும் குளிர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுடெல்லி: கடும் குளிருடன் கூடிய பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் வட மாநிலங்களில் பனிப்பொழிவும் குளிரும் நாளுக்கு நாள் அதிக ரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இம்முறை குளிரின் அளவு மக்களால் தாங்கமுடியாத அளவில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதை யடுத்து பாலர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. பிற பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர வசதியாக காலையில் ஒரு மணி நேரம் தாமதமாகப் பள்ளிகள் திறக்கவும் மாலையில் ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளிகளை மூட வும் மாநில கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பனிப்பொழிவின் தாக்கம் தின மும் மதிய வேளை வரை அதிக மாக இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் ரயில் போக்கு வரத்தும் நிலைகுத்தியுள்ளது. இதற்கிடையே வசிப்பிடமின்றி அவதிப்படுபவர்களுக்கு அடைக் கலம் கொடுப்பதற்கு ஏற்ப டெல்லி யில் உள்ள சமூக ஆர்வலர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

 

கடுமையான குளிர் அடித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அன்றாடப் பணியில் ஈடுபட்டுள்ள பால்காரர். படம்: ஏஎப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்