லஞ்சம் வாங்கி 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்த அதிகாரி கைது

விஜயவாடா: லஞ்சம் வாங்கியே நூறு கோடி ரூபாய் குவித்த காவல்துறை அதிகாரியை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்தனர். விஜயவாடாவில் கலால்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் ஆதிசே‌ஷு, லஞ்சம் வாங்கி சொத்துகள் சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து அவரை, அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். இதில் அவர் லஞ்சம் வாங்குவது உறுதியானதையடுத்து அவரது வீடு, உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் ஆதிசே‌ஷு நூறு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துகள் வாங்கிக் குவித்திருப்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.