அன்புமணி தொடங்கும் ‘நாம் விரும்பும் சென்னை’ பிரசாரம்

சென்னை: சென்னையில் வெள்ளப் பேரழிவுக்கான காரணங்கள், இனி வெள்ளம் தாக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சென்னை பெருநகரை வாழத்தகுந்த, செழிப்பான நகரமாக மாற்றுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘நாம் விரும்பும் சென்னை’ என்ற ஆவணத்தை இம்மாதம் 9ஆம் தேதி பசுமைத் தாயகம் சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.

அதன் ஒரு பகுதியாக ‘நாம் விரும்பும் சென்னை பிரசாரம், மக்கள் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியைப் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடை பெறுகிறது. இதில் பாமக முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று ‘நாம் விரும்பும் சென்னை’ பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.