காவல்துறை பாதுகாப்பு வேண்டும்; பழ.கருப்பையா மகன் போலிசில் மனு

சென்னை: மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதையடுத்து தனது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி பழ.கருப்பையாவின் மகன் ஆறுமுகம் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், இரு தினங் களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தன் வீட்டிற்கு வந்த ஒருவர், தனது தந்தையைப் பற்றி தரக் குறைவாகப் பேசியதாகத் தெரி வித்தார்.

“அன்று வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது, வாயிற்கதவு அருகே நின்றிருந்த ஒருவர் தாம், அதிமுக அலுவல கத்தில் இருந்து வருவதாகக் கூறினார். பின்னர் ‘அந்த நாய், பழ.கருப்பையா இருக்கிறானா?’ என ஒருமையில் கேட்டார்.

“மரியாதை குறைவாகப் பேச வேண்டாம் என கூறியதும், அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கி வந்த மூன்று பேர், கற் களை வீசித் தாக்குதல் நடத்தி னர்,” என்றார் ஆறுமுகம். மர்ம நபர்கள் வந்த ஆட்டோ வில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததாகக் குறிப் பிட்ட அவர், இந்தச் சம்பவத்தை அடுத்தே பாதுகாப்பு கோரி மனு அளித்ததாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, செய்தியாளர்க ளிடம் பேசிய பழ.கருப்பையா, ஊடகங்களில் தாம் கருத்து தெரி வித்ததை ஏற்றுக்கொள்ள முடி யாத சிலர் தன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாகக் கூறினார்.

Loading...
Load next