மோடி வருகை: உச்சக்கட்ட விழிப்புநிலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் கோவை நகருக்குச் செல் வதைத் தொடர்ந்து போலி சார் உச்சக்கட்ட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிற்பகல் 2.30 மணியளவில் கோவை விமான நிலையத்தில் மோடி வந்திறங்கும்போது விமானநிலைய வட்டாரத்தைச் சுற்றிலும் சுமார் 450 போலி சார் பாதுகாப்புக்கு நிற்பர். சிங்காநல்லூரில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கு சுமார் 1,000 போலிசார் பாதுகாப்பு தருவர். அரசியல் பொதுக்கூட்டத் துக்கு போலிசார் மிகுந்த விழிப்பு நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். மொத்தமாக மோடியின் கோவை வருகையையொட்டி 5,000 போலிசார் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிட்டது.

கடந்த 1998ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி பேச இருந்த இடம் அருகே 12 குண்டுகள் வெடித்து 58 பேர் உயிரி ழந்ததோடு 200 பேர் காய முற்றனர். சமயப் பதற்றம் மிகுந்ததாக கோவை இருப் பதால் மோடிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு தரப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி