கல்லூரி மாணவர்கள் 14 பேர் கடலில் மூழ்கி பலி

மும்பை: கல்லூரி மாணவர்கள் 14 பேர் கடலில் மூழ்கிப் பலியான சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை யும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலாவின் ஓர் அங்கமாக முருத் கடற்கரைக்கு வந்திருந்த அம்மாணவர்கள், கடலில் நீந்தியபோது இந்தச் சோக சம்பவம் அரங்கேறியது. புனேவில் உள்ள இனம்தார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கள் 126 பேர், மகாராஷ்டிரா மாநிலம், ரெய்கட் மாவட்டத்தி லுள்ள முருத்-ஜஞ்சிரா கடற் கரைக்கு வந்திருந்தனர். சுற் றுலா வந்தவர்களில் சுமார் இருபது பேர் மட்டும் கடலில் குளிக்க விரும்பியுள்ளனர்.

இதையடுத்து சில நிமிடங் கள் மாணவர்கள் கடலில் நீந்திக்கொண்டிருந்தனர். அப் போது திடீரென எழுந்த பெரிய அலையில் மாணவர்கள் சிக்கிய தாகக் கூறப்படுகிறது. இதில் நீச்சல் தெரியாதவர், கடலில் தத்தளிக்கத் தொடங்கினர். எனினும் அலையின் வேகத்துக் கும் கடலின் ஆழத்துக்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் 14 மாணவர்கள் நீரில் மூழ்கினர். இதையடுத்து சக மாண வர்கள் அளித்த தகவலின் பேரில் கடலோரக் காவல்படை விமானமும் இரு மீட்புப் படகு களும் உடனடியாக மாணவர் களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 14 மாணவர்களின் சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. மேலும் சிலர் மாய மானதாகக் கூறப்படும் நிலை யில் அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.