பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றம்: ராமதாஸ் நம்பிக்கை

வேலூர்: பெண்கள் நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர இயலும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மது மூலம் வரும் வருமானம், இலவசத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றார். இத்தகைய இலவசப் பொருட்கள் தேவையா? என்று கேள்வி எழுப்பிய அவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.