பெண்கள் மீது தாக்கு: கெஜ்ரிவால் கண்டனம்

புதுடெல்லி: தலைநகர் புது டெல்லியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தின்போது பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக் கவை என அவர் கூறியுள்ளார். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டிருந்த தலித் மாணவரான ரோகித் வெமுலா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இதைய டுத்து நாடு முழுவதும் மாணவர் கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது.

ரோகித்தின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அந்த வகையில் ஜனவரி 30ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் முன்பு பெண்கள் உட்பட ஏராளமான மாணவர்களும் பங்கேற்ற ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி ஆர்ப் பாட்டம் நீடித்ததால், டெல்லி போலிசார் தடியடி நடத்தினர். இச்சமயம் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஆண் போலி சார் தாக்கியதாகக் கூறப்படுகி றது.

இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து டெல்லி காவல் துறைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் தங்கியிருந்து இயற்கை மருத்துவ சிகிச்சை பெற்று வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள் ளார். தங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் ஒடுக்க டெல்லி காவல் துறையை மோடி அரசு பயன் படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி