ஸ்டாலின்: ‘நமக்கு நாமே’ பயணம் தொடரும்

சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் ‘நமக்கு நாமே’ பயணம் தொடரும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய அவர், வரும் 12ஆம் தேதி நமக்கு நாமே பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகக் கூறினார். “இந்தப் பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதிமுகவின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகம் கோமா நிலை யில் உள்ளது. இதனால், நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை,” என்றார் ஸ்டாலின்.

தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள், சிறுபான்மையின மக்கள் என எல்லாத் தரப்பு மக்களுக்கும் அதிமுக ஆட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், ஆட்சி மாற்றம் மூலம் அனைவருக்கும் உரிய தீர்வு கிடைக்கும் என்றார். “தேர்தலுக்குப் பிறகும் ‘நமக்கு நாமே’ பயணம் தொடரும். நான் அதில் ஆர்வமாக உள்ளேன். இந்தப் பயணம் நீடிப்பதால் மக்க ளுக்குப் பயன் கிடைக்கும். “திமுக ஆட்சிக்கு வந்தால் முன்பு செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை எல்லாம் மீண்டும் கொண்டுவருவோம்,” என்று ஸ்டாலின் மேலும் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. படம்: ஊடகம்

14 Nov 2019

சபரிமலைக்கு பெண்கள் செல்லத் தடையில்லை; வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சிவசேனா கட்சியின் தலைமையகம். (படம்: ராய்ட்டர்ஸ்)

14 Nov 2019

நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - சிவசேனா சூசகம்