ஜெயலலிதா மன்னிப்புக் கோரவேண்டும் - ராமதாஸ்

சென்னை: மரக்காணம் கலவர சம்பவம் தொடர்பாக சட்டப் பேரவையில் உரையாற்றியபோது பாமக மீது அவதூறு புகார்களைக் கூறியதற்காக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்புக் கோர வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மரக்காணம் கலவர வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் “நீதி வென் றுள்ளது,” என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். “மாமல்லபுரத்தில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரைப் பெருநாள் விழாவில் பங்கேற்கச் சென்றுகொண்டிருந்த பாமக தொண்டர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திட்ட மிட்டு நடத்திய வன்முறை, கலவரத்தில் செல்வராஜ், விவேக் ஆகிய இருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித் திருக்கிறது. இதன்வழி அப்பாவி இளைஞர்கள் படுகொலைக்கு நீதி கிடைத்திருக்கிறது,” என ராமதாஸ் கூறியுள்ளார். காவல்துறையினர் நினைத் திருந்தால் வன்முறையைத் தடுத்து, மாநாட்டுக்கு வந்தவர் களைப் பாதுகாப்பாக அனுப்பி யிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அச்சமயம் காவல்துறை அதிகாரிகள் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி உள்ளார். முதல்வர் ஜெயலலிதாவும் கொலையாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாகக் குறிப்பிட் டுள்ள அவர், பாமக தொண்டர்கள் படுகொலை செய்யப்படவில்லை என்றும் அவர்கள் வாகனத்தின் மேலிருந்து விழுந்து இறந்தனர் என்றும் கூறி, முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்க முதல் வர் முயன்றதாகச் சாடியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்