நாஞ்சில் சம்பத்: திமுகவில் இணைய மாட்டேன்

சென்னை: தன்னிடம் இருந்து அதிமுக தலைமை கட்சிப் பதவியைப் பறித்ததால் கவலைப்படவில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர் பதவியில் இருந்து நீக்கப் பட்ட பின்னர், முதன்முறை யாக நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், திமுகவில் இணையப் போவதில்லை என்று கூறியுள்ளார். “கட்சித் தலைமை பதவியைக் கொடுத்தது, அது வாகவே பறித்தும் கொண்டது. தற்போது தொலைக் காட்சி நிகழ்ச்சிகள்,

பட்டிமன்றம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டம் என ஒரு சொற்பொழிவாளனாக வலம் வருகிறேன். “தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்ப மில்லை; அது எனக்கு இலக்கும் அல்ல. ஒரு பறவையைப் போல பறக்கத் துடிக்கிறேன். அரசியல் களத்திலும் இலக்கிய களத்திலும் நான் நிகரற்ற சொற்பொழிவாளன் என்ற உச்சத்தை தொடுவதற்கு என் சிறகுகளை அசைத் துக் கொண்டிருக்கிறேன்,” என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். திமுகவில் இணையப் போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று குறிப்பிட்டுள்ள அவர், திமுகவில் யாருட னும் தமக்குத் தொடர்பு இல்லை என்று தெரிவித் துள்ளார். திமுகவில் இருந்து தமக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். படங்கள்: ஊடகம்

15 Nov 2019

அமைச்சர்: சபரிமலைக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்

மனிதர்கள் சுவாசிக்கத்  தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் இம்மாதம் முதல்  தேதி அங்கு மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம்: ஊடகம்

15 Nov 2019

புதுடெல்லி: சுவாசிக்க காற்றை விற்பனை செய்யும் ‘ஆக்சிஜன் பார்’