சுடச் சுடச் செய்திகள்

9 மாத உச்சத்தில் தங்கம்

தங்கத்தின் விலை நேற்று முன் தினம் ஒன்பது மாதத்தில் இல் லாத உச்சத்தைத் தொட்டது. ஜனவரி மாத இறுதியிலிருந்தே ஏறி வந்த தங்கத்தின் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக சனிக்கிழமை உயர்ந்தது. இந்த ஆறு நாட்களில் மட்டும் இந்தியச் சந்தையில் 620 ரூபாய் உயர்ந் தது. உலகச் சந்தையில் ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலையில் 1.5 விழுக்காடு உயர்வு கண்டு $1,173.50 ஆனது. இந்தியத் தலைநகர் டெல்லி யில் ஆபரணமல்லாத சொக்கத் தங்கத்தின் விலை 30 ரூபாய் உயர்ந்து பத்து கிராம் 27,700 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

அதேபோல 99.5 விழுக்காடு சுத்த தங்கத்தின் விலை 27,550 ஆனது. இந்த நிலவரம் கடந்த ஆண்டு மே 19ஆம் தேதிக்கு பிறகு சனிக்கிழமை காணப்பட் டது. விலை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon