திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 இடம்

கூட்டணி சேர்ந்து போட்டியிட முன்வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக தயாராக இருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிட்டு உள்ளது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவோடு கூட்டு சேர்ந்த காங்கிரசுக்கு 63 இடங்கள் ஒதுக் கப்பட்டன. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த கே.வி. தங்கபாலு இந்த இடங்களை விடாப்பிடியாகக் கேட்டுப் பெற்றார். ஆனால், தமிழகத்தில் காங் கிரஸ் கட்சி வளர்ச்சி பெறராத நிலையில், வாசன் தலைமையிலான ஒரு பகுதியினரும் பிரிந்து சென்று விட்டனர். எனவே, இப்போதிருக் கும் காங்கிரசுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை என அண்மையில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த திமுக மகளிரணிச் செயலாளர் கனி மொழி விளக்கிச் சொன்னார். மேலும், பீகாரில் அண்மையில் வாக்கு வங்கி விழுக்காடு அடிப் படையில் தொகுதி ஒதுக்கப்பட் டதையும் கனிமொழி உதாரண மாகக் குறிப்பிட்டார்.

அந்த மாநிலத்தில் காங்கிர சுக்கு 8 விழுக்காடு வாக்குகளே உள்ளதால் 40 இடங்களை லாலு=நிதிஷ் குமார் தலைமையி லான கூட்டணி ஒதுக்கியது. “தமிழகத்தில் அதே கணக் கின்படி பார்த்தால் 15க்கும் குறை வான இடங்களைத்தான் காங் கிரசுக்குத் தர முடியும். இருந்த போதிலும் திமுக பெருந்தன்மை யோடு 25 இடங்களை ஒதுக்கத் தயாராக உள்ளது,” என சோனியா காந்தியிடம் சொல்லப்பட்டது. இந்த பெருந்தன்மைக்குக் கார ணம், கூட்டணியிலிருந்து திமுக விலகிய பின்னரும் மாநிலங்கள் அவைத் தேர்தலில் தமக்கு ஆதர வாக வாக்களித்து தம்மை எம்.பி. ஆக்கிய நன்றிதான் என்றும் கனிமொழி தெரிவித்திருக்கிறார். மாநில காங்கிரசாரிடம் பகிர்ந்த பின்னர் முடிவு சொல்வதாக சோனியா கூறியுள்ளாராம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். படங்கள்: ஊடகம்

15 Nov 2019

அமைச்சர்: சபரிமலைக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்

மனிதர்கள் சுவாசிக்கத்  தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் இம்மாதம் முதல்  தேதி அங்கு மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம்: ஊடகம்

15 Nov 2019

புதுடெல்லி: சுவாசிக்க காற்றை விற்பனை செய்யும் ‘ஆக்சிஜன் பார்’