சுயநல அரசியல் நடத்துகிறார் ஜெயலலிதா - விஜயகாந்த்

விஜயகாந்த் கடும் விமர்சனம் சென்னை: முதல்வர் ஜெயலலிதா வுக்கு மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வருக்கு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என கூறியுள்ளார். ஜெயலலிதா கடமை தவறி, சுயநல அரசியலும் ஆட்சியும் நடத்துவதாக விமர்சித்துள்ள அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அதிமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவதாகச் சாடினார்.

“காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் அரசின் நேரடிக் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்படும் என முதல்வர் ஜெய லலிதா அறிவித்துள்ளார். “கடந்த பல ஆண்டுகளாக அப் பகுதி விவசாயிகள் இத்தகைய நிலை யங்கள் திறக்கப்பட வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிமுக அரசு செவி சாய்க்கவில்லை. “தற்போது திடீரென விவசாயிகள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல், உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்ய முடியும் என வியாக்கியானம் கூறி, சட்டப்பேரவைத் தேர்தலை மனதிற்கொண்டு, விவசாயிகளை ஏமாற்றி திட்டமிடுகிறது அதிமுக அரசு,” என விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் டெல்டா மாவட்ட விவசா யிகளின் நலனிலேயே அக்கறை செலுத்தாத அதிமுக அரசா டெல்டா அல்லாத பிற மாவட்ட விவசாயி களின் நலனில் அக்கறை செலுத்தப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தாம் முன்பே சுட்டிக்காட்டிய விவசாயிகளின் பல்வேறு பிரச் சினைகளுக்கு இதுவரையிலும் தீர்வு காணப்படவில்லை எனத் தெரிவித்து உள்ளார். “உணவை உற்பத்தி செய்யும் உழவர்களையும் முதல்வர் ஏமாற்றி வருவதைப் பார்க்கும்போது ‘போயும், போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே’ என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகி றது. எல்லோரையும், எல்லா நாளும், எப்போதும் ஏமாற்ற முடியுமெனக் கரு தும் அவருக்கு, தமிழக விவசாயிகள் தக்க சமயத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்,” என்று விஜயகாந்த் மேலும் கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு