வைகோ குறித்து அவதூறு தகவல்: மதிமுக போலிசில் புகார்

திண்டுக்கல்: மதிமுக பொதுச் செயலர் வைகோ சென்ற வாகனம் மோதி இருவர் பலியானதாக பொய்த் தகவல் பரப்பப்படுவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி பழனி, உடுமலை சாலையில் நிகழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். கோவையில் இருந்து வந்த லாரி ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், அதில் வந்த இரு இளையர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. அதில், வைகோ பயணம் செய்த கார் மோதியதில் இருவர் பலியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இறந்து கிடக்கும் இளையர்களைக் கண்டு வைகோ கண்கலங்கும் புகைப்படம் அத்தகவலுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு மதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட மதிமுக செயலர் செல்வ ராகவன், அவதூறு தகவலைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அம்மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

“சம்பவம் நடந்த நேரத்தில் பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவ் வழியே தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது விபத்து குறித்து அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.