திருவரங்கம், சமயபுரம், பிள்ளையார்பட்டியில் சசிகலா வழிபாடு

திருவரங்கம்: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கட்சித் தலைவர்கள் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்க, அவர்களது நலம் விரும்பிகள் கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிட்டு வருகின் றனர். அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வரு மான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அண்மைக்காலமாக ஊர்ஊராகச் சென்று ஆலய தரி சனம் செய்து வருகிறார். திருவில்லிஉபுத்தூரில் நடந்த கும் பாபிஷேகத்தில் கலந்துகொண்ட சசிகலா, இம்மாதத் தொடக்கத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயி லுக்கும் பழனி முருகன் கோயி லுக்கும் சென்று தரிசனம் செய் தார். இந்நிலையில், நேற்று திருச்சி திருவரங்கம் கோயிலுக்குச் சென்றார் சசிகலா. கருடாழ்வார், தன்வந்திரி, ராமானுஜர், தாயார் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு அங்கு உள்ள ‘பேட்டரி கார்’ மூலம் சென்று அவர் தரிசனம் செய்தார்.

சசிகலாவுடன் அவரது அண் ணன் மகள் பிரபாவதியும் இருந் தார். பின்னர் திருவரங்கம் ஜீயரைச் சந்தித்து இருவரும் ஆசி பெற் றனர். இதையடுத்து சமயபுரம் கோவி லுக்குச் சென்று தரிசனம் செய்த சசிகலா, திருச்சி சங்கம் ஹோட் டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அதனைத் தொடர்ந்து பிள்ளையார் பட்டிப் புறப்பட்டுச் சென்றார் அவர். அங்கு சசிகலா விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய் யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்; ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும்; அவர் மீதுள்ள வழக்குக் களிலிருந்து விடுதலையாக வேண் டும்,’ என்று அவர் கோயில் கோவிலாகச் சென்று வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.