ஏழைகள் போர்வையில் அனுபவிக்கும் பணக்காரர்கள்

புதுடெல்லி: இந்தியாவில் ஏழை களுக்குக் கிடைக்கவேண்டிய மானியங்களை வசதி படைத்தவர்கள் அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மானியச் சலுகையைப் பெறுகின்றனர் என்ற அதிர்ச்சிகர மான தகவல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அரசின் மானிய உதவிகள் ஏழை மக்களுக்குச் சென்றடைவது தான் நோக்கம். ஆனால் பொது வாக வழங்கப்படும் மானியத்தின் பலனில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்குப் பணக்காரர்களும் வசதி படைத்தவர்களும் அனுபவிப்பது தெரியவந்துள்ளது.

இவ்விதம் செல்லும் மானியத்தை சிறந்த நிதி நிர்வாகத்தின் மூலம் கட்டுப்படுத்தி செலவுகளைக் குறைக்க முடியும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதி உதவிகள் பொதுவாக ஏழைகளை மட்டும் சென்றடைவதில்லை. அரசின் உதவிகளில் பலனடைவோரில் வசதி படைத்தவர்களும் இருக்கின்றனர். வசதி படைத்தவர்களுக்கு உதவியானது சிறு சேமிப்புத் திட்டங்கள் மூலமாகவும் வரிச் சலுகை மூலமாகவும் மானிய உதவியாகவும் அதாவது வெவ் வேறான ஆறு வழிகளில் கிடைப்ப தாகக் குறிப்பிட்டுள்ளது.

அரசின் சலுகைகளில் எரிவாயு தோம்பு, ரயில்வே துறை, மின்சாரம், விமான எரிபொருள் சலுகை, தங்கம், மண்ணெண்ணெய் இவற் றுக்கு அளிக்கப்படும் சலுகைக் களின் பலன்களை வசதி படைத்தவர்களும் அனுபவிக்கின்ற னர். இத்தகைய திட்டங்களில் மானிய உதவி ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. இத்தகைய வசதிகளை நடுத்தர வர்க்கத்தின ரோடு அதிக வசதி படைத்தவர் களும் பெறுகின்றனர்.

இக்குறைகளைக் கண்டறிந்து அவற்றைப் போக்குவது அரசின் பற்றாக்குறையைப் போக்க உத வும். அத்துடன் இவ்விதம் செல் லும் நிதியை வேறு நலத் திட்டங் களுக்கு அரசு திருப்பி பயன்படுத்த முடியும். பிரதமர் மோடி, கடந்த மாதம் வரி, மானியம் தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்தார். ஏழை மக்களுக்கு மானியச் சலுகையும் பணக்காரர்களுக்கு வரிச்சலுகையும் அளிக்கப்படு கிறது என்று அவர் விளக்கினார். விவசாயி, ஏழைகளுக்கு அளிக்கப்படுவதை நிபுணர்களும் அரசு அதிகாரிகளும் பொதுவாக மானிய உதவி என்கின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடத்தல் கும்பலிடமிருந்து 123 கிலோ தங்கம், ரூ.2 கோடி பணம் மற்றும் 9,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: ஊடகம்

18 Oct 2019

தமிழக-கேரள தங்கக் கடத்தல் கும்பல் கைது

‘நூர்’ எனப் பெயரிடப்பட்ட பெண் புலிக்காக இவ்விரு புலி சகோதரர்களும் சண்டையிட்டுக்கொண்டதாக வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் குறிப்பிட்டார். படம்: வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் வெளியிட்ட காணொளியிலிருந்து

18 Oct 2019

புலிகளும் இப்படித்தானா? பெண்புலிக்காக சீறிப்பாய்ந்து சண்டையிட்ட சகோதரர்கள்