சுவாமி கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு கல்லூரிக்குச் சென்ற பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. முட்டை, தக்காளி ஆகியவற் றையும் அவரது கார் மீது வீசித் தாக்கினர். போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கறுப்புக் கொடியும் காட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர். கான்பூரின் நவாப்கஞ்ச் பகுதி யில் உள்ள விஎஸ்எஸ்டி கல்லூரி யில் ஒரு விழாவில் பங்கேற்க சுவாமி சென்றபோதுதான் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. கான்பூர் கல்லூரியில் அனைத் துலக தீவிரவாத எதிர்ப்பு தொடர் பான கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் பங்கேற்க சுவாமி சென்றார். அவர் மீதான தாக்குத் தலுக்கான காரணம் தெரிய வில்லை. என்றாலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கோரி சுவாமி தாக்கல் செய்திருந்த மனுவை, அது தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மேற்முறையீட்டு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப் பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடத்தல் கும்பலிடமிருந்து 123 கிலோ தங்கம், ரூ.2 கோடி பணம் மற்றும் 9,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: ஊடகம்

18 Oct 2019

தமிழக-கேரள தங்கக் கடத்தல் கும்பல் கைது

‘நூர்’ எனப் பெயரிடப்பட்ட பெண் புலிக்காக இவ்விரு புலி சகோதரர்களும் சண்டையிட்டுக்கொண்டதாக வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் குறிப்பிட்டார். படம்: வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் வெளியிட்ட காணொளியிலிருந்து

18 Oct 2019

புலிகளும் இப்படித்தானா? பெண்புலிக்காக சீறிப்பாய்ந்து சண்டையிட்ட சகோதரர்கள்