உளவுத்துறை கண்காணிப்பில் கனிமொழி

சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை தமிழக உளவுத்துறை கண்காணிப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின் றன. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சாதி அமைப்புகளை திமுகவுக்கு ஆதரவாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் கனிமொழி. இதையடுத்தே அவ ரது செயல்பாடுகளை கவனிக்கும் படி உளவுத்துறைக்கு ஆட்சி மேலி டம் உத்தரவிட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்காக தன்னால் ஆன பங்க ளிப்பைச் செய்து வருகிறார் கனி மொழி.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிணைபெற்ற பின்னர் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. மேலும் திமுகவின் மகளிரணி செயலராகவும் பொறுப் பேற்றுக் கொண்டார். மு.க.ஸ்டாலின் முதல்வராக எந்தவித எதிர்ப்பும் காட்டாததால் அவரது ஆதர வும் கனிமொழிக்கு எளிதில் கிடைத்துள்ளது. இதையடுத்து தென்மாவட்டங் களிலும் வடமாவட்டங்களிலும் திமுகவை பலப்படுத்தும் பணியை ஸ்டாலின் ஒப்புதலுடன் கனி மொழிக்கு திமுக தலைவர் கருணாநிதி வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

21 Nov 2019

தெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு

ரூபாய் நோட்டுகள் பறந்ததால் ஏற்பட்ட ‘பணமழை’ மக்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. படம், காணொளி: ஊடகம்

21 Nov 2019

கோல்கத்தாவில் ‘பணமழை’; நோட்டுகளை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு துரிதமாக செயல்பட்டு சிகிச்சை பார்த்த மருத்துவ குழுவினரை மகாராஷ்டிரா அரசு வெகுவாக பாராட்டியுள்ளது. படம்: டுவிட்டர்

21 Nov 2019

ரயில் பயணிக்கு பிரசவம் பார்த்த 'ஒரு ரூபாய் மருத்துவக் குழு'