சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த அதிகாரி சம்பந்தம் ஓய்வு

சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் புலனாய்வுப் பிரிவில் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் ஜி.சம்பந்தம். இவர் இன்றோடு பணி ஓய்வு பெறுகிறார். கடந்த 1997ஆம் ஆண்டு இவர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு குறித்து விசாரிக்கும் குழுவில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார் சம்பந்தம். அவ்வழக்கு தொடர்பான பணிகளில் இரவு, பகலாக ஈடுபட்டார். மேலும் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையை கண்காணிக்கவும் அனுப்ப ப்பட்டார் சம்பந்தம். எனினும் கடந்த 19 ஆண்டுகளாக இவ்வழக்குடன் சம்பந்தப்பட்டு உள்ள இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக பதவி உயர்வே அளிக்கப்படவில்லை. இதனால் மிகுந்த வருத்தத்துடன் பணி ஓய்வு பெறுவதாக அவர் கூறுகிறார்.