ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் களம் காணும் பொன்ராஜ்

விருதுநகர்: முன்னாள் அதிபர் அப்துல்கலாம் கனவு கண்ட தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என அவரது அறிவியல் ஆலோசகராகச் செயல்பட்ட பொன்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். கலாமின் அக்கனவை நனவாக்கும் பொருட்டு, அரசியல் களம் காண இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “கலாமின் கொள்கையான தரமான கல்வி அமையவேண்டும். தொழில் முன்னேற்றமடைய வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்களை வகுக்கவேண்டும். எனவே இளைஞர்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்குகிறேன்,” என்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பொன்ராஜ் கூறினார். லஞ்சம், ஊழலற்ற அரசை உருவாக்கவே தாம் அரசிய லுக்கு வருவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விவரங்களை அறிவித்த கையோடு தேர்தல் பிரசாரம் தொடங்கப்படும் என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்